நடிகர் தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொங்கலன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் ‘தனி ஒருவன்’ படத்தில் நடித்த கணேஷ் வெங்கட் ராமன் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ், பூஜா ஜாவேரி, தம்பி இராமையா, ராதா ரவி, கருணாகரன் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment