ஒரு படம் ஆரம்பிக்கும் போதே பெயர் வைத்துவிட்டால் எந்த விதமான பிரச்சினையும் இருக்காது. ஆனால் தற்போது உருவாகி வரும் படங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பெயர் வைக்கும் முன்பே பல பெயர்கள் வைக்கப்படுகின்றன.
இதனை தங்களுக்கு கிடைக்கும் பப்ளிசிட்டியாக கருதி படக்குழுவினரும் பெயர் வைக்காமல் தாமதித்து வருகின்றனர். அதே பப்ளிசிட்டிதான் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ள பிரபு சாலமன் படத்திற்கும் கிடைத்துள்ளது.
இப்படத்தில் தனுஷுடன் கீர்த்தி சுரேஷ், பூஜா ஷாவேரி, கணேஷ் வெங்கட்ராம், தம்பி ராமையா, ராதாரவி, கருணாகரன், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில் வருகிற பொங்கல் தினத்தில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவிருக்கின்றனர். இப்படத்துக்கு ரயில், தடக் தடக், டெல்லி டூ சென்னை ஆகிய பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டது. இத்துடன் மிரட்டு என்ற ஒரு புதிய தலைப்பும் தற்போது இணைந்துள்ளது.
இதனையறிந்த ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். பொங்கல் கொண்டாடும் வேளையில் தனுஷின் தலைப்பு தெரியாமல் குழம்பி கிடக்கிறோம். இனிமே தலைப்பு வைத்து விட்டால் படத்தை ஆரம்பித்தால் நன்றாக இருக்குமே என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
தனுஷ் தயாரித்து அமலா பால் நடிக்கும் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. நேற்றே இப்படத்திற்கு ‘அம்மா கணக்கு’ என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment