பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் புதிய படத்துக்கு ரயில் என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை முழுக்க முழுக்க டெல்லியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் பணிபுரியும் பூச்சியப்பன் எனும் கதாபாத்திரத்தில் தனுஷும் இதே ரயிலில் பயணம் செய்யும் மலையாள பெண்ணாக சரோஜா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் பொங்கலன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இமான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
0 comments:
Post a Comment