தமிழ், இந்தி திரையுலகைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் உருவாக இருக்கும் படத்தில் அறிமுகமாக இருக்கிறார் தனுஷ்.
'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் தனுஷ். 'காதல் கொண்டேன்', 'திருடா திருடி', 'ஆடுகளம்', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது நடிகனாக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.
இந்தியில் 'ராஞ்சனா (Raanjhanaa)' படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் 'ஷமிதாப்' படத்தில் நடித்தார். தற்போது ஹாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ்.
பிரபல ப்ரெஞ்ச் நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard' திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். தனுஷூடன் இணைந்து ‎UmaThurman‬ மற்றும் ‎Alexandra Daddario‬ முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இப்படத்தை Marjane Satrapi என்ற இரான் மற்றும் ப்ரெஞ்ச் படங்களின் இயக்குநர் இயக்க இருக்கிறார். இப்படத்தில் தனுஷ் பாத்திரத்தின் காட்சிகள் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும், இத்தாலி, மொரோகோ மற்றும் ப்ரான்ஸ் நாடுகளில் இப்படம் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

0 comments:

Post a Comment

 
Top