மைனா, கும்கி, கயல் என தரமான படைப்புக்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் பிரபு சாலமன். இவர் அடுத்து ரயில் என்ற படத்தை எடுத்து முடித்து விட்டார்.
இப்படத்தில் தனுஷ் - கீர்த்தி சுரேஷ் நடிக்க, டி.இமான் இசையமைத்துள்ளார். 
முதன் முறையாக இப்படத்தை பற்றி மனம் திறந்துள்ளார் பிரபு சாலமன்.
இப்படத்தில் தனுஷ் ரயில் கேண்டீனில் வேலைப்பார்க்கும் பூச்சியப்பன் என்ற கதாபாத்திரத்தில் வருகிறாராம், ஹீரோயினுக்கு டச்சப் கேர்ளாக கீர்த்தி சுரேஷ் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் வர, இவர்களுக்குள் ஏற்படும் காதல், அந்த காதலுக்கு எதிர்ப்பு என படத்தில் கதை இருக்கும் என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top