தனுஷ்… திரையுலகில் தன் கால்தடத்தை வைத்து இன்றோடு 15வது வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதே நாளில்தான் இவரின் ‘துள்ளுவதோ இளமை’ படம் வெளியானது.
மேலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் பட்டைய கிளப்பின. இப்படத்திற்கு சில திரையரங்குகளில் பெண்களை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘காதல் கொண்டேன்’ படத்தில் நடித்து தமிழகத்தில் பட்டி தொட்டி வரை பாப்புலர் ஆனார்.
அதன்பின்னர் இவர் ஆடிய மன்மத ராசா பாடல் மூலம் குழந்தைகளையும் ஆடவைத்தார். இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராகி போனார்.
அதன்பின்னர் இவரது படங்கள் பேசப்பட்டாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த ‘ஆடுகளம்’ படம் தனுஷை தேசியளவில் கொண்டு சென்றது. தேசிய விருதை பெற்றுத் தந்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தார்.
பின்னர் கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கும் தாவினார். சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் ‘ஷமிதாப்’ படத்தில் நடித்தார். விரைவில் ஹாலிவுட் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘தொடரி’, ‘கொடி’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்படும் என கூறப்படுகிறது.
மேலும் நடிகராக தன்னை உயர்த்தி கொண்ட இவர், தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து, ‘எதிர் நீச்சல், காக்கா முட்டை, நானும் ரௌடிதான், விசாரணை,’ ஆகிய தரமான படங்களை கொடுத்து வருகிறார்.
மேலும் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம் பாடகராக உருவெடுத்த தனுஷ், பால படங்களில் பாடல் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
வெற்றி பவனி வரும் தனுஷை தனுஷ் தம்பிங்க சார்பாக வாழ்த்துகிறோம்.

0 comments:

Post a Comment

 
Top