கடந்த வருடம் டிசம்பரில் தனுஷின் தங்க மகன் வெளியானது. இதனையடுத்து, அரை டஜன் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார் தனுஷ்.
இதில் ஓரிரு படங்கள் ரிலீசுக்கு தயாரானாலும், கடந்த ஐந்து மாதங்களாக ஒரு படம் கூட வெளியாகவில்லை.
இந்நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படத்தின் பாடல்கள் ஜூன் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தை ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கொடி படத்தை ஜூலை இறுதியில் வெளியிடப்போகிறார்களாம்.
தனுஷின் இந்த இரண்டு படங்களுக்கும் இடையில் ஜூலை 1ஆம் தேதி கபாலி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Top