கொடி படத்தை முடித்த கையோடு நடிகர் தனுஷ், கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடிக்கத் தொடங்கினார். இதுவரை இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் துருக்கியில் 20 நாட்கள் வரை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் தனுஷ் கிளீன் ஷேவ் செய்த முகத்துடன் ஹீரோயின் மேகா ஆகாஷை தோளில் தூக்கி வருகிறார். இதன்மூலம் இப்படத்தில் ஆக்ஷன் மட்டுமல்லாது கௌதமின் வழக்கமான ரொமான்ஸ் போர்ஷனும் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ‘பாகுபலி’ புகழ் ராணா இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment