பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் தொடரி. இப்படத்தில் தனுஷ் பூச்சியப்பன் எனும் கதாபாத்திரத்தில் ரயில் நிலையத்தில் வேலை செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சரோஜா எனும் கதாபாத்திரத்தில் நடிகைக்கு மேக்கப் போடும் கேரள பெண்ணாக நடித்துள்ளார்.
இப்படம் குறித்து சமீபத்தில் பேசிய பிரபு சாலமன், ” ஒருநாள் காலையில் தொடங்கி அடுத்தநாள் மதியம் வரையில் ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. தனுஷை தவிர்த்து வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்க முடியாது. அவர் என் வேலையை பாதியாக குறைத்திருக்கிறார்” என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment