‘ஆடுகளம்’ மற்றும் ‘விசாரணை’ ஆகிய தேசிய விருது படங்களைத் தொடர்ந்து மீண்டும் ‘வடசென்னை’ படத்திற்காக தனுஷ்-வெற்றிமாறன் இணைகின்றனர்.
இதனிடையில் தனுஷ் நிறைய படங்களில் நடிக்க கமிட் ஆகியிருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போகும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 15ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
தனுஷுடன் சமந்தா, ஆண்ட்ரியா இருவரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க தனது வுண்டர்பார் நிறுவனம் சார்பாக தனுஷ் தயாரிக்கிறார்.
0 comments:
Post a Comment