துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அரசியல் திரில்லர் படம் கொடி. இப்படத்தில் நடிகை த்ரிஷா அரசியல்வாதியாகவும் அதேசமயம் ஒரு லோக்கல் ரவுடியாகவும் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.
இவர் இப்படத்தில் நடந்துவரும் ஸ்டைல் மற்றும் ஹீரோவுக்கு சமமாக பேசும் பன்ச் வசனங்கள் போன்றவற்றை ஷூட்டிங் ஸ்பாட்டில் கவனித்த தனுஷ், கைதட்டி ஆராவாரம் செய்தாராம். மேலும் இப்படம் த்ரிஷாவுக்கு நல்ல பெயர் வாங்கி தரும் எனவும் இவர் பல இடங்களில் நம்பிக்கையுடன் கூறி வருகிறாராம்.
பிரேமம் புகழ் அனுபமா இப்படத்தில் மற்றொரு நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் படம் ஜுலையில் திரைக்கு வரவுள்ளது.
0 comments:
Post a Comment