எதிர்பார்ப்புக்கு கொஞ்சம் கூட குறையில்லாமல் ரஜினியின் கபாலியை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜுலை 1 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லையாம்.
மே மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜுன் மாதத்திற்கு தள்ளி வைக்ககப்பட்டுள்ளது.
கோச்சடையான் மற்றும் லிங்கா படத்தின் விழாக்களை விட மிகபிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், தனுஷின் தொடரி படத்தின் பாடல்களையும் ஜுன் மாதத்தில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, ஜுன் மாதத்தில் கபாலியுடன் தொடரி பாடல்கள் மோதும் எனத் தெரிகிறது.

0 comments:

Post a Comment

 
Top