தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவிருக்கும் படம் வட சென்னை. தற்சமயம் கௌதம் இயக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்துவரும் தனுஷ், அதன் படப்பிடிப்பு முடிந்ததும் இதில் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் வரும் ஜூன் 15-ம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு தமிழ் படத்திலும் மற்றும் ஃபகிர் எனும் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment