பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் தொடரி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 8-ம் தேதி சென்னையில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இப்படத்தின் இசை உரிமையை பிரபல லஹரி இசை நிறுவனம் மாபெரும் தொகையைக் கொடுத்து கைப்பற்றியுள்ளது.
இப்படத்துக்கு பிரபு சாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. திருவிளையாடல் ஆரம்பம் படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து தனுஷ் – இமான் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Top