இந்தியா-சீனா கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘குங்பூ யோகா’
இதில் உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் நாயகனாக நடித்து வருகிறார். நாயகியாக தனுஷின் அனேகன் படத்தில் நடித்த அமைரா தஸ்தூர் நடிக்க, வில்லனாக சோனு சூட் நடித்து வருகிறார்.
தற்போது இப்படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
என்னதான் ஜாக்கிசான் பெரிய ஸ்டாராக இருந்தாலும் படப்பிடிப்பில் அனைவருடனும் மிக எளிமையாக நடந்து கொள்கிறாராம். (ஒருவேளை சூப்பர் ஸ்டார்ன்னா அப்படிதான் இருப்பாங்க போல..)
சமீபத்தில் அமைராவின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளார் ஜாக்கி.
மேலும் வில்லன் சோனு சூட்டுடன் நடித்ததை பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் ஒரு குத்துப்பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளதாம். ஜாக்கிசானை அப்பாட்டுக்காக ஆட்டி வைத்திருக்கிறார் நடன இயக்குனர் பராகான்.
இது இல்லாமல் படத்தில் பிரபலமான லுங்கி டான்சும் உள்ளதாம்.
இப்படம் ஆங்கில மொழியில் உருவானாலும், சீனம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட இருக்கின்றனர்.
2016 தீபாவளிக்கு படம் வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Top