குழந்தை நட்சத்திரமாகவே 20க்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களில் நடித்தவர் மீனா.
அதன்பின்னர் ஹீரோயினாக தென்னிந்தியாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து, ரசிகர்களை தன் கண்களால் கைது செய்தவர் இவர்.
தற்போது இவரது செல்ல மகள் நைனிகாவும் நடிக்க வந்துவிட்டார்.
இந்நிலையில், தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார் மீனா.
அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதால் இதற்கான அறிவிப்பை மே 28ஆம் தேதி வெளியிடவிருக்கிறாராம்.
இவர் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க இருப்பதால், அதில் கமல்ஹாசன், தனுஷ், மகேஷ்பாபு ஆகியோர் நடிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு மார்கெட்டை மையமாக வைத்தே இதை தயாரிக்க இருக்கிறாராம் இந்த கண்ணழகி.

0 comments:

Post a Comment

 
Top