கொடி படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே சொன்னதுபோல் இவர் இப்படத்தில் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார். இதில் முதலாவது கெட்டப் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னை, பொள்ளாச்சி மற்றும் துருக்கியில் 20 நாட்கள் வரை படமாக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் மும்பையில் தொடங்குகிறது. இதில் இந்த இரண்டாவது கெட்டப் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. அனேகன் பாணியில் இந்த போர்ஷனும் 80, 90-களில் நடப்பது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். மேகா ஆகாஷ் இதில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
0 comments:
Post a Comment