நடிகர் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் தனுஷின் ஜோடியாக ‘ஒரு பக்க கதை’ படத்தின் நாயகி மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் தனுஷின் ஜோடியாக ‘ஒரு பக்க கதை’ படத்தின் நாயகி மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில் தனுஷ் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி இணையும் மூன்றாவது படமாகவும் கௌதம் மேனன் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி இணையும் நான்காவது படமாகவும் இப்படம் உருவெடுக்கும். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் விரைவில் மும்பை செல்லவுள்ளனர். இப்படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு அங்குதான் நடைபெறும் என சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment