பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், கருணாகரன் நடித்திருக்கும் தொடரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு வேலைகள் எப்போதோ முடிந்துவிட்டது.
எனினும் பல மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் இன்னும் முடிந்த பாடில்லை. எனவே இப்படம் எப்போது வெளியாகும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து தற்போது பேசியுள்ள தனுஷ், விரைவில் இப்படம் தொடர்பான முறையான அறிவிப்பு வெளிவரும் என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment