பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'தொடரி' படத்தின் டப்பிங் பணியை நேற்று காலை ஆரம்பித்த தனுஷ், ஒரே நாளில் டப்பிங் பணியை முடித்து சாதனை செய்துள்ளார்.
காலையில் டப்பிங் பணியை ஆரம்பித்துள்ளதாக டுவீட் செய்த தனுஷ் பின்னர் இரவில் டப்பிங்கை முடித்துவிட்டதாக டுவீட் செய்துள்ளார். தனுஷ் தன்னுடைய டுவிட்டரில் Finished dubbing for thodari. Very very very excited about the way the film has shaped up. Can't wait for you guys to watch it. ‪#‎verysoon‬ என்று பதிவு செய்துள்ளார்.
தனுஷ், கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Top