நடிகர் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 50% நிறைவடைந்துள்ளது. இதற்கிடையில் அவர் நடித்துள்ள தொடரி மற்றும் கொடி படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் இவர் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் செப்டெம்பர் மாதம் தொடங்கவுள்ளது. மேலும் இப்படத்துக்கும் கார்த்திக்கின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment