சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்தில் அவர் ஒரு வயதான கேங்ஸ்டராக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
அதேபோல் தல அஜித்தும் சிறுத்தை சிவா இயக்கும் தனது அடுத்த படமான ‘தல 57′படத்தில் கேங்ஸ்டராக நடிக்க போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் ரஜினி, அஜித்தை அடுத்து தனுஷும் தனது அடுத்த படத்தில் கேங்ஸ்டராகத்தான் நடித்து வருகிறாராம்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’படத்தில் தனுஷூக்கு ஸ்டைலிஷான கேங்ஸ்டர் கேரக்டர் என்று கூறப்படுகிறது.
தற்போது துருக்கியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேகா ஆகாஷ் நாயகியாகவும், ராணா வில்லனாகவும் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்று கூறப்பட்டாலும் அது உறுதி செய்யப்படவில்லை.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment