மாதவனின் இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் மற்றும் ஹிந்தியில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங். இந்த படத்துக்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. பாக்ஸராக தனது கேரியரை தொடங்கிய இவர், தற்போது ஒரு நல்ல நடிகையாக உருவெடுத்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், தமிழில் தனக்கு அஜித்தும், தனுஷும் பிடித்த நடிகர்கள் எனவும் அவர்களுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார். தற்சமயம் இவர் விஜய் சேதுபதி ஜோடியாக ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்து வருகிறார்.
0 comments:
Post a Comment