தனுஷ் நடிப்பில் கொடி, தொடரி என இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.
அந்த படங்களின் டீசர், பாடல் எதுவும் வெளியாக நிலையில், தன் அடுத்தடுத்த படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார் தனுஷ்.
அதிலும் எவரும் எதிர்பாராத வகையில் கௌதம் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இதில் தனுஷின் ஜோடியாக நடிக்க லட்சுமி மேனனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கை நடித்தவருக்கு பின் வாய்ப்புகள் கிடைக்காது என்று பலரும் கூறி வந்த நிலையில் முன்னணி நடிகரான தனுஷ் படத்தில் லட்சுமி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Top