நடிகர் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ எனும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். கௌதம் மேனனின் பெரும்பாலான படங்களில் ஒரு திருமண காட்சி இடம்பெறும்.
அந்த வரிசையில் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் படங்களை போல இந்த படத்திலும் ஒரு திருமண காட்சி இடம்பெறுகிறது.
சமீபத்தில் இதற்கான படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதில் திருமண கோலத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
0 comments:
Post a Comment