நடிகர் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா‘ எனும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். படம் ஆரம்பித்து ஜெட் வேகத்தில் இதன் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன. இதில் சில வசன காட்சிகளும் துருக்கியில் ஒரு பாடல் காட்சியும் படமாகியுள்ளது.
இந்நிலையில் இதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதை தனுஷ் டிவிட்டரில் தெரிவித்தார். தனுஷ் ஜோடியாக இப்படத்தில் ‘ஒரு பக்க கதை’ நாயகி மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் கௌதம் மேனனின் ஒன்றாக என்டர்டேயின்மென்ட் நிறுவனமும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும் சேர்ந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.
0 comments:
Post a Comment