ஓரிரு தினங்களுக்கு முன், 63வது ஆண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் சிறந்த நடிகருக்கான விருதை ஐ படத்தில் நடித்தற்காக விக்ரம் பெறுவார் என தென்னிந்தியாவே எதிர்பார்த்தது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
இதுகுறித்து விவேக் ஒரு சிறிய கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதில்…
“நண்பா விக்ரம்…
“ஐ” காக உடலை பெருக்கினாய்;
பின் சுருக்கினாய்;
அகோர உருவில் உயிர் உருக்கினாய்;
உனக்கெதற்கு விருது?
நீதானே எங்கள் விருது!”
என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வரிகளுக்கு தனுஷ், ஷங்கர் உள்ளிட்ட பலரும் ரீ-ட்வீட் செய்து ஆதரவு அளித்துள்ளனர்.
விக்ரமுடன் ‘தூள்’, ‘சாமி’, ‘அந்நியன்’ உள்ளிட்ட பல படங்களில் விவேக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் சுருக்கினாய்;
அகோர உருவில் உயிர் உருக்கினாய்;
உனக்கெதற்கு விருது?
நீதானே எங்கள் விருது!”
0 comments:
Post a Comment