நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என தொட்ட அனைத்திலும் ஹிட். இப்போது அடுத்தடுத்த படங்களின் லிஸ்ட்டைப் பார்த்தால் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. அது வேறு யாருமல்ல நம்ம தனுஷ் தான். வர இருக்கும் தனுஷ் படங்களின் க்ளிம்ப்ஸ் இதோ...
தொடரி
முழுக்க ரயிலிலேயே நடக்கும் கதை. டீ-பாயாக தனுஷ். நடிகையின் மேக்கப் அசிஸ்டெண்ட் கீர்த்தி சுரேஷ். ரயிலில் டீ,காபி,கூல்ரிங்ஸ் விற்பவனுக்கும் (தனுஷ்) இடையே நடக்கும் காதல் தான் கதை. பிரபு சாலமனின் முந்தைய படங்கள் போல் கண்டிப்பாக கலர்ஃபுல் பேக்ட்ராப் இருக்கும். படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து டப்பிங் நடந்து கொண்டிருக்கிறது. தனுஷ் தனது டப்பிங் போர்ஷன் முழுவதையும் முடித்துவிட்டார். படம் மிக விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
கொடி
'புதுப்பேட்டை' ஸ்டைலில் முரட்டு தாடி, அரசியல்வாதி கேரக்டர் முதல் முறை இரட்டை வேடத்தில் தனுஷ் என பக்கா பேக்கேஜாக ரெடியாகியிருக்கிறது கொடி. ஆடுகளத்திலேயே சேர வேண்டிய தனுஷ் - த்ரிஷா ஜோடி, காக்கிசட்டையில் இணைய வேண்டிய துரை செந்தில் குமார் - தனுஷ் கூட்டணி என சூப்பர் காம்பினேஷன்கள் இணைந்திருக்கும் படம். படத்தில் தனுஷுக்கு அப்பாவாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார் என்பதும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ். ஒரு தனுஷுக்கு ஜோடி த்ரிஷா இன்னொரு தனுஷுக்கு ஜோடியாக ப்ரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன் என்பதும் இன்னொரு ஹைலைட்.
என்னை நோக்கி பாயும் தோட்டா
ஸ்டைலிஷ் இயக்குநர் கௌதம் மேனன் கூட்டணியில் தனுஷ் நடிக்கும் படம். கேங்க்ஸ்டர் கதையில் ஹேன்சம் லுக்கில் தனுஷ் செம ஸ்பெஷல். படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வீடியோக்கள் வெளியாகிக் கொண்டே இருக்க படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளும் கூடிக் கொண்டே இருக்கிறது. 'யாரடி நீ மோகினி'க்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா தனுஷ் படத்துக்கு இசையமைக்கிறார். ராணா தனுஷுக்கு வில்லன், 'ஒரு பக்கக் கதை' மேகா ஆகாஷ் ஹீரோயின் என ஃப்ரெஷ் டீம் இணைந்திருக்கிறது.
தி ஃபகிர்
தனுஷின் ஹாலிவுட் என்ட்ரி. 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹூ காட் ட்ராப்ட் இன் ஆன் இகா ஆவ்ர்ட்ரோப்' என்ற நாவலைத் தழுவி உருவாகும் படம். 'கில் பில்' படத்தில் நடித்த உமா துர்மன், 'சான் ஆண்டர்ஸ்' படத்தில் நடித்த அலெக்ஸான்ட்ரியா டட்டாரியோ 'ப்ரின்ஸ் ஆஃப் பெர்சியா' படத்தில் நடித்த கெம்மா, 'கேப்டன் பிலிப்ஸ்' படத்தில் நடித்த பர்கத் அப்தி என ஹாலிவுட் நட்சத்திரக் கூட்டமே படத்தில் இருக்கிறது. மார்ஜென் இயக்கும் இப்படம் விரைவில் தொடங்கவிருக்கிறது, அடுத்த வருடம் வெளிவரும்.
வட சென்னை
வெற்றிமாறனின் கனவுப் படம். புதுப்பேட்டையை விட பலமடங்கு பலம் வாய்ந்த கதை, இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் படம் என மிகப் பெரிய எதிர்பார்ப்பிலிருக்கிறது இப்படம். ஆடுகளம் முடித்ததும் அடுத்த படமாக வெற்றிமாறன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட படம், தனுஷின் இந்தி என்ட்ரியால் கொஞ்சம் தள்ளிப் போனது, மறுபடி தொடங்கும் என எதிர்பார்த்த போது மீண்டும் 'ஷமிதாப்' பட வேலைகளில் பிஸியானார். இப்போது ஹாலிவுட் படத்தில் இணையவும் போகிறார். ஆனால், நிச்சயம் இந்தப் படம் எடுக்கப்படும் இதன் வேலைகள் எப்போது வேண்டுமானால் தொடங்கும் என்பது மட்டும் உறுதி என்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ்
'பீட்சா', 'ஜிகர்தண்டா' என இரண்டு ஹிட்களுக்குப் பிறகு 'இறைவி' வெளியீட்டு வேலைகளில் இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதைப் பற்றிய தகவலை வெளியிட்டிருந்தார். மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
இது தவிர, கண்டிப்பாக வரும் என சொல்லப்படும் 'புதுப்பேட்டை - 2' படம் பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாகவே இருக்கிறது. எது எப்படியோ வரிசையாக அடுத்தடுத்த ரிலீஸ்களால் இந்த வருடம் முழுதையும் நிறைக்க தனுஷ் ஆன் தி வே...
0 comments:
Post a Comment