தனுஷ், அமலாபால் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தையும் தனுஷ் தயாரிப்பில் தினேஷ், சமுத்திரக்கனி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விசாரணை படத்தையும் பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கன்னடத்தில் ரீமேக் செய்யபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் தேசிய விருது வாங்கிய விசாரணை படத்தை ஹிந்தியிலும் அவர் ரீமேக் செய்யவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுமல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தையும் இவர் தயாரிக்க போவதாக சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment