பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படமான 'தொடரி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக இன்று தனுஷ் தனது பாகத்தின் டப்பிங் பணியை தொடங்கினார். ஒருசில நாட்களில் தனுஷின் டப்பிங் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் கீர்த்தி சுரேஷ் உள்பட இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளின் டப்பிங் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

டெல்லியில் இருந்து சென்னை வரும் ரயிலில் நடைபெறும் சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதை என்பதால் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரயிலில்தான் படமாக்கப்பட்டுள்ளது. தனுஷ் இந்த படத்தில் பேண்ட்ரி ஊழியராகவும் கீர்த்தி சுரேஷ் மலையாள பெண்ணாக நடித்திருப்பதாகவும் கூறப்படுறது.

தனுஷ், கீர்த்தி சுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் உத்தமன், தம்பி ராமையா, ராதாரவி, கருணாகரன், ஆர்.வி.உதயகுமார், பேராசிரியர் ஞானசம்பந்தம், பட்டிமன்றம் ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Top