தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவிருக்கும் படம் வட சென்னை. இதன் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தங்கமகன் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிப்பார் என கூறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது சமந்தா திருமணம் குறித்த பேச்சு அடிக்கடி வருவதால் அவர் இப்படத்தில் இருந்து விலகி விட்டதாக மீடியாக்களில் பேசப்படுகிறது. எனினும் படக்குழு இதுகுறித்து எந்தவொரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
முதலில் இப்படம் இரு பாகங்களாக உருவாகும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படம் மூன்று பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி ஆகியோர் மிரட்டும் வில்லன்களாக நடிக்கவுள்ளனர்.
0 comments:
Post a Comment