தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் வட சென்னை. இதன் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. தங்கமகன் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என அண்மையில் ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள தனுஷ், ” வட சென்னையில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார். இது கேமியோ ரோலை விட சற்று அதிக நேரம் வரக்கூடிய ஒரு ரோல்” என கூறியுள்ளார்.
இப்படத்தில் ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி ஆகியோர் மிரட்டும் வில்லன்களாக நடிக்கவுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Top