நடிகர் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ எனும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் இரண்டு ஷெட்யூல் சென்னை மற்றும் துருக்கியில் வேகமாக நடந்து முடிந்துள்ளது. அதைதொடர்ந்து இதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் மும்பையில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவை இங்கே:
1. முதல் பாதியில் காதலும் இரண்டாம் பாதியில் ஆக்ஷனுமாக இப்படம் கௌதமின் முந்திய படங்களில் இருந்து வேறுபடும் என கூறப்படுகிறது.
2. படத்தில் ஹீரோயின் மேகா ஆகாஷ் ஒரு ஹீரோயினாகவே வருகிறார். அவரை காப்பாற்ற செல்லும் தனுஷின் பயணம்தான் படத்தின் மையக்கரு.
3. படம் முழுக்கவே வாய்ஸ் ஓவரில்தான் கதை சொல்லப்படுமாம்.
4. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் – யுவன் கூட்டணி மீண்டும் இப்படத்தின் மூலம் இணையவுள்ளது. மேலும் கௌதம் படத்துக்கு யுவன் இசையமைப்பது இதுவே முதல்முறையாகும்.
0 comments:
Post a Comment