கோலிவுட் முதல் பாலிவுட் வரை சென்று பிஸியாக இருக்கும் தனுஷ், அவ்வப்போது தரமான படங்களையும் தயாரித்து வருகிறார்.
எனவே தன்னுடைய படங்களின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளுக்காக ஒரு புதிய ஸ்டூடியோவை திறந்துள்ளார்.
சென்னை, அடையாறில் அமைந்துள்ள இந்த ஸ்டூடியோ ரூ. 10 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.
இவரின் படங்களின் எடிட்டிங், டப்பிங், பாடல் ரெக்கார்ட்டிங், பின்னணி இசை என அனைத்தும் தேவைக்கும் பணிகளையும் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இவையில்லாமல் மற்ற படங்களின் பணிகளுக்கும் இங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Top