கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள முடிஞ்சா இவன புடி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் படத்தின் நாயகன் நான் ஈ புகழ் சுதீப் கலந்து கொண்டார். இவருடன் படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இப்படத்தின் தயாரிப்பாளர் சூரப்பா பாபு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது….
முதலில் இவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவிருந்தார். ஆனால் அவர் விபத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
எனவே கேஎஸ் ரவிக்குமாரிடன் என்ன செய்யலாம் என்று கேட்டேன். அவர் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் வருவார்கள் என்றார்.
ஆனால் அவங்கள வருவாங்களா? அவர்களுக்குள் பிரச்சினை இருப்பது போல பேசிக் கொள்கிறார்களே என்றேன்.
அவர்கள் மூவரும் சேர்வது பூகம்பம்தான் என்றனர். ஆனால் இங்கே அவர்கள் மூவரும் எந்த ஈகோவும் இல்லாமல் ஒன்றாக வந்து அந்த வார்த்தைகளை எல்லாம் பொய்யாக்கி விட்டார்கள். அவர்களுக்கு நன்றி” எனப் பேசினார்.
0 comments:
Post a Comment