தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியின் கனவுப் படமான வடசென்னை படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தனுஷ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.
இதற்காக சென்னை மத்திய சிறைச்சாலையை செட் போட்டு படமாக்கி வருகின்றனர்.
இதில் தனுஷ் கைதியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இவருடன் சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, அமலா பால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படம் குறித்து படக்குழுவினர் தெரிவித்தாவது…
“1977ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையுள்ள காட்சிகளை இக்கதை கொண்டுள்ளது.
எனவே தற்போது 40 ஆண்டுகளுக்கு முன் உள்ள காட்சிகளை படமாக்கி வருகிறோம்.
மூன்று பாகமாக உருவாகவுள்ள இப்படத்தின் முதல் பாகம் மட்டும் 2017ஆம் ஆண்டு ஜூலையில் வெளியாகும்” என்றனர்.
இதனிடையில் கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இந்தி படங்களில் நடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறாராம் தனுஷ்.
0 comments:
Post a Comment