இப்போதைய ரசிகர்களை கவர ஏதாவது புதுசாக செய்தால்தான் முடியும் என்றாகி விட்டது நிலைமை. அதனால் வழக்கம்போல் ரொமான்ஸ், காமெடி என்று வந்து செல்வதெல்லாம் வேலைக்கு ஆகாது என்பதால் தனுஷ் தொடரி படத்தை அடுத்து கொடி படத்தில் வேஷ்டி கதர் சட்டை அணிந்து அரசியல்வாதி ஆகியிருப்பவர், கெளதம்மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டாவில் ஸ்டைலிசாக மாறி நடித்து வருகிறார். ஆனால் இந்த படத்தில் நடித்து வரும்போதே வெற்றிமாறனின் வடசென்னைக் காகவும் தயாராகிறார். முழுக்க முழுக்க வடசென்னையில் நடக்கும் அந்த கதையில் தாடி கெட்டப்பில் நடிக்கிறாராம் தனுஷ். அதனால் கெளதம்மேனன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்து விட்டவர், இப்போது வடசென்னைக்காக தாடி வளர்த்தபடி தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Top