முடிஞ்சா இவன புடி என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் தலைமை ஏற்றார்.
ஆடியோவை விஜய்சேதுபதி வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.
இப்படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், நாயகன் சுதீப், சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தனுஷ் பேசியதாவது….
நான் ஈ படத்தில் சுதீப்பின் நடிப்பை கண்டு வியந்தேன்.
நான் பொதுவாக எந்த நடிகரின் நடிப்பை பார்த்தும் வியந்து அவர்களுக்கு போன் செய்து பேசியது இல்லை.
ஆனால் சுதீப்புக்கு போன் செய்து வாழ்த்தை தெரிவித்தேன்.
ஒருமுறை பாலு மகேந்திரா என்னிடம் சொன்னார். நான் தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்தால், சுதீப்புக்கு தேசிய விருது கொடுத்து இருப்பேன் என கூறினார்.
இதை வேறு எங்கும் வேண்டுமானாலும் அவரிடம் நான் சொல்லியிருக்கலாம்.
ஆனால் இதுதான் சரியான இடம் என நினைக்கிறேன்.
நான் சிவாகார்த்திகேயனுடன் நடித்துவிட்டேன், விஜய்சேதுபதியுடனும் நடித்துவிட்டேன்.
எனக்கு கிச்சா சுதீப்புடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.” என்று கூறினார்.

ஹ்ம்… தனுஷின் ஆசையை சுதீப் நிறைவேற்றுவாரா என பார்க்கலாம்.?

0 comments:

Post a Comment

 
Top