தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் வட சென்னை. இதன் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. தங்கமகன் படத்தை
தொடர்ந்து இந்த படத்திலும் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார். இது கேமியோ ரோலை விட சற்று அதிக நேரம் வரக்கூடிய ஒரு ரோல் என ஏற்கனவே நாம் கூறியிருந்தோம்.
இந்நிலையில் நடிகர் கிஷோர் வரும் காட்சிகளில்தான் இப்படத்தில் விஜய் சேதுபதியும் வருவார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுடன் ஆண்ட்ரியா, டேனியல்
பாலாஜி, சமுத்திரக்கனி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Top