தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக பார்க்கப்படும் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஒரு படத்தில் இணைந்து நடித்தனர்.
அதன்பின்னர் வந்த ரஜினி-கமல், விஜய்-அஜித், சூர்யா-விக்ரம் ஆகியோரும் படங்களில் இணைந்து நடித்தனர்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே இரு துருவங்களாக பார்க்கப்படும் சிம்பு-தனுஷ் இணைந்து நடித்தது இல்லை.
ஆனால் தற்போது இருவரும் ஒரு படத்திற்காக இணைந்துள்ளனர்.
தமன் இசையமைப்பில் உருவாகிவரும் திக்கா என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார் தனுஷ்.
இப்படத்தில் உள்ள மற்றொரு பாடலை சிம்பு பாடியிருக்கிறார்.
ஒரே படத்தில் தனுஷ் மற்றும் சிம்பு பாடியிருப்பது ரசிகர்கள் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இப்படத்தில் நாயகனாக சாய் தரம் தேஜா நடித்து வருகிறார். சுனில் ரெட்டி இயக்க, டாக்டர் ரோகின் ரெட்டி தயாரிக்கிறார்.
விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.
0 comments:
Post a Comment