தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் வட சென்னை. இதன் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. வேலையில்லா பட்டதாரி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் தனுஷ் ஜோடியாக அமலாபால் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல் கிஷோர், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கருணாஸ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
தற்போது இப்படத்தில் 1977-ல் நடைபெறுவது போன்ற காட்சிகள் படமாகி வருகிறது. 40 ஆண்டுகளில் வட சென்னையில் நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

0 comments:

Post a Comment

 
Top