துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அரசியல் திரில்லர் படம் கொடி. இதன் படப்பிடிப்பு பணிகள் எப்போதோ முடிந்துவிட்டது. மேலும் இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை வெளியாகியுள்ளது. அவை இங்கே:
இப்படத்தில் தனுஷ், அன்பு எனும் கதாபாத்திரத்தில் அமைதியை விரும்பும் பேராசிரியாகவும் கொடி எனும் கதாபாத்திரத்தில் வன்முறையை விரும்பும் அரசியல்வாதியாகவும் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்குமான போராட்டத்தில் வெல்வது அகிம்சையா அல்லது வன்முறையா என்பதுதான் இப்படத்தின் கதைக்கரு.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜூலை 28-ல் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment