தனுஷ் நேற்று (ஜூலை 28) தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இவர் தற்போது நடித்துவரும் வடசென்னை பட குழுவினருடனும் மற்றும் , தனது குடும்பத்தினருடனும் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.
இந்நிலையில் தனுஷே எதிர்பாராத வண்ணம் அங்கு வந்த ரஜினிகாந்த், தனுஷிற்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.
பிறந்தநாள் காணும் தனுஷுக்கு வாழ்த்து கூறி, ஆசீர்வதித்தார்.
அதன்பின்னர் கிட்டதட்ட சுமார் 3 மணி நேரம் ரஜினி அங்கு இருந்தாராம்.
தனுஷ் பிறந்த நாளுக்கு ரஜினி நேரில் வந்து வாழ்த்துதியது இதுவே முதல் முறை.
இப்புகைப்படங்களை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் ரஜினியுடன் வடசென்னை படக்குழுவினர் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
0 comments:
Post a Comment