நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப், தற்போது தனி ஹீரோவாக முடிஞ்சா இவன புடி படத்தில் நடித்து வருகிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது சிவகார்த்திகேயன் பேசும்போது தனுஷை சார்… சார் என்று அடிக்கடி அழைத்தார். விஜய்சேதுபதி தன்னை விட மூத்தவர் என்று அவரை அண்ணா எனவும் அழைத்தார்.
“சதீஷ்ஷை நண்பர் என அழைத்து அவர் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது…
“நான் என் கேரியரை பற்றி கூட அவ்வளவாக நினைத்து பார்த்தது இல்லை.
ஆனால் சதீஷ் தன் கேரியரை பற்றி நிறைய நினைத்து பார்ப்பார். இன்று அவர் நினைத்தது போல பிஸியாகி விட்டார்.
இதற்குதான் அவர் ஆசைப்பட்டார். ரெமோ, றெக்க, விஜய் 60 என தொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருப்பது சந்தோஷம்” என்றார்.
0 comments:
Post a Comment