‘கபாலி’ படத்தின் வெற்றியை அடுத்து எந்திரனின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ஷங்கர் இயக்கிவரும் இப்படத்தை தான் ரஜினி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தனுஷ் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாக அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் படத்தையும் ரஞ்சித்தே இயக்கவிருக்கிறார் என்பது கூடுதலான தகவல். இப்போது இப்படம் பற்றிய மேலும் ஒரு ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது. அது
வேறொன்றுமில்லை… ஷங்கரின் ‘2.0’ படத்திற்கு முன்பாகவே, ரஜினி – ரஞ்சித் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறாராம் தனுஷ்.
வேறொன்றுமில்லை… ஷங்கரின் ‘2.0’ படத்திற்கு முன்பாகவே, ரஜினி – ரஞ்சித் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறாராம் தனுஷ்.
காரணம்… இந்த வருட இறுதிக்குள் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டாலும், படத்தின் கிராபிக்ஸ் வேலைகளுக்கு நிறைய நாட்கள் ஆகும் என்பதால், படம் அடுத்த வருட தீபாவளிக்கே வெளியாகும் என கூறப்படுகிறது. ‘2.0’ ரிலீஸுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால், அதற்குள் குறுகிய கால தயாரிப்பாக ரஞ்சித்தை வைத்து ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதே ரஜினியின் எண்ணமாம். அதற்காகவே தன் மருமகன் தனுஷ் பட கம்பெனியில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளாராம். செப்டம்பர் மாத இறுதிக்குள் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
0 comments:
Post a Comment