ராஜ்கிரண் சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷை மருமகனே என்று தான் அன்போடு அழைப்பாராம்.
தனுஷ் பவர் பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். அவர் இயக்குனராக அவரது அண்ணன் செல்வராகவன் கொடுத்த தைரியம் தான் காரணம் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.
பவர்பாண்டி படத்தில் நடித்து வரும் ராஜ்கிரண் தனுஷை மருமகன் என்று தான் அன்போடு அழைப்பாராம். இப்பொழுது இல்லை எப்பொழுதுமே அப்படி தான் மருமகனேன்னு அழைப்பாராம்.
எம் மருமவன் என்னை வைத்து படம் இயக்குவதில் சந்தோஷமாக உள்ளது என்று பெருமை பொங்க கூறி வருகிறாராம் ராஜ்கிரண். தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கிய முதல் படத்தின் ஹீரோவே ராஜ் கிரண் தான்.
தற்போது தனுஷ் இயக்கும் முதல் படத்தின் ஹீரோவும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment