இந்திய அரசின் தேசிய விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை குவித்த படம் விசாரணை.
வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார்.
தினேஷ், சமுத்திரக்கனி, கிஷோர், ஆடுகளம் முருகதாஸ், ஆனந்தி உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு செல்லும் படமாக ‘விசாரணை’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இத்தவலை உறுதி செய்துள்ள தனுஷ், படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment