தனுஷின் தொடரி படம் ரசிகர்களை மிகவும் எதிர்ப்பார்க்க வைத்துள்ளது. படத்தின் டீஸர், பாடல்கள் என ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளனர் படக்குழுவினர்.
இந்நிலையில் படம் குறித்து பிரபுசாலமன் கூறுகையில், இதுவரை வந்த எனது படங்களில் புதுமுகங்களை வைத்து படம் இயக்கியது போல தொடரி படத்துக்கும் புதுமுகங்கள் தேடினேன்.
ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் பெரிய நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டேன்.
அதன்படி தனுஷும் இந்த வேடத்திற்கு பொறுத்தமாக இருந்தார். எங்களுக்குள் இருந்த நல்லதொறு புரிதல் காரணமாகவே படம் எதிர்ப்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது.
எனக்கு தெரிந்து தமிழில் ரயிலை வைத்து இதுவரை எந்த படமும் வந்தது இல்லை என்பதால் இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment