இயக்குனர் ஆக வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் ஆசை. அதையும் தற்போது நிறைவேற்றும் வகையில் ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ஒருநாள் படப்பிடிப்பில் ராஜ்கிரணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தனுஷ். இதுபற்றி ராஜ்கிரண் கூறும்போது, தனுஷ் படப்பிடிப்பில் வேகமாக வந்து அவரது போனை என்னிடம் கொடுத்து பேச சொன்னார்.
போனை காதில் வைத்தால், அவருக்கே உரிய வேகத்தில் நலம் விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதோடு பவர் பாண்டி மிகவும் அருமையான கதை, உங்களுக்கு பொருத்தமான கதை, தூள் கிளப்புங்க என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment