‘தொடரி’ படத்திற்கு பிறகு தனுஷ் நடித்து ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ள படம் ‘கொடி’. தற்போது, கால்ஷீட் டைரியில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா, ஹாலிவுட் படம், வட சென்னை, கார்த்திக் சுப்பராஜ் படம், மாரி-2’ என அடுத்தடுத்து பிஸி செடியூல். இதுதவிர தனுஷ் ‘பவர் பாண்டி’ எனும் படத்தை இயக்கி வருகிறார்.
இதில் தனுஷ் – துரை செந்தில்குமார் காம்போவில் விறுவிறுப்பாக உருவாகிவரும் படம் ‘கொடி’. இதன் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தனுஷ் முதன் முதலாக இரட்டை வேடத்தில் மெர்சல் செய்யவிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ‘ப்ரேமம்’ புகழ் அனுப்பமா பரமேஸ்வரன் என இரண்டு ஜோடிகளாம். மேலும், தனுஷிற்கு அப்பாவாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவரும் இதனை வெற்றிமாறனுடன் இணைந்து ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ சார்பில் மதன் தயாரித்து வருகிறார். பொலிட்டிக்கல் த்ரில்லரான ‘கொடி’யின் பர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் நேற்று மாலை ட்விட்டப்பட்டு ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரல் ட்ரெண்டு அடித்து வருகிறது. படத்தை வருகிற தீபாவளிக்கு தனுஷ் ரசிகர்களுக்கு ‘ரெட்டை தீபாவளி’ ட்ரீட்டாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு.
0 comments:
Post a Comment